அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நீரிழிவு நோய்த் தடுப்பை தேசிய முன்னுரிமையாக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
16 AUG 2026 5:06PM by PIB Chennai
நீரிழிவு நோயைத் தடுப்பதை ஒரு தேசிய முன்னுரிமையாக மாற்ற வேண்டும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய நீரிழிவு ஆராய்ச்சி சங்கமான ஆர்எஸ்எஸ்டிஐ-ன் கிராமப்புறங்களில் நீரிழிவுத் தடுப்பு தொடர்பான இணையதள தொடக்க விழா, நீரிழிவு விழிப்புணர்வு காணொலி நூலகமான விஸ்வாஸ் தொடக்க விழா ஆகியவற்றில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், கிராமப்புற இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக கூறினார். தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதில் நடவடிக்கை தேவை என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் 40 வயதுக்குக் கீழ் உள்ளதால், நாட்டின் இளைஞர்களின் ஆரோக்கியத்தையும் திறனையும் பாதுகாப்பது வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இன்றியமையாதது என்று அவர் கூறினார்.
இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, முன்னணி நிபுணர்களை ஒன்றிணைத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300188®=48&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2300219)
आगंतुक पटल : 7