அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வாத நோய்கள், தசைக்கூட்டு நோய்களின் மருத்துவ மேலாண்மையை மேம்படுத்த மும்முனை அணுகுமுறை தேவை - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 16 AUG 2026 5:11PM by PIB Chennai

பொறுப்பான நோய் பராமரிப்பின் அடிப்படையாக, முறையான மருத்துவ நடைமுறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

“வாதவியல் அத்தியாவசியங்கள்: மருத்துவராக விரும்பும் புதியவர்களுக்கான ஒரு புதிய வழிகாட்டல்” என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆரம்பகால நோயறிதல், சரியான நேரத்தில் மருத்துவம், தேவையற்ற வழிமுறைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த மும்முனை அணுகுமுறையானது தேவையற்ற மருந்துகள், பரிசோதனைகளைக் குறைக்கவும், நோயறிதலில் ஏற்படும் தாமதங்களைத் தடுக்கவும், நோயாளிகள் சரியான நேரத்தில் பொருத்தமான நிபுணரிடம் செல்வதை உறுதி செய்யவும் உதவும் என்று கூறினார்.

புகழ்பெற்ற வாதவியல் நிபுணர்களான பேராசிரியர் ஆனந்த் என் மாலவியா, டாக்டர் பிரசாந்த் கௌஷிக் ஆகியோரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், எய்ம்ஸ் மருத்துவமனையின் வாதவியல் துறைத் தலைவர் டாக்டர் உமா குமார், டாக்டர் சங்கர் சுப்ரமணியம் உள்ளிட்ட மருத்துவத் துறையின் மூத்த வல்லுநர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300189&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300216) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी