கலாசாரத்துறை அமைச்சகம்
இல்லந்தோறும் மூவண்ணக் கொடி இயக்கம் : வந்தே மாதரத்தின் உணர்வில் ஒருங்கிணைந்த நாடு
प्रविष्टि तिथि:
15 AUG 2026 9:55AM by PIB Chennai
இல்லந்தோறும் மூவண்ணக் கொடி இயக்கத்தின் ஐந்தாவது ஆண்டு, லட்சக்கணக்கான இந்தியர்களுடன் தேசியக் கொடியை மேலும் நெருக்கமாக்கியுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றிணைந்து தேசியக் கொடியை ஏற்றவும், பேரணிகளில் பங்கேற்கவும், வந்தே மாதரம் பாடவும், இருசக்கர, மிதிவண்டிப் பேரணிகளில் கலந்துகொள்ளவும், கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும் தொடங்கியுள்ளனர்.
2026 ஆகஸ்ட் 9 முதல் 17 வரை கடைப்பிடிக்கப்படும் இல்லந்தோறும் மூவண்ணக் கொடி இயக்கத்துடன் இந்த ஆண்டு, இந்தியாவின் தேசிய கீதமான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைப் பெறுகிறது . இந்தக் கொண்டாட்டங்கள், தேசத்தின் ஆழமாகப் போற்றப்படும் இரண்டு அடையாளச் சின்னங்களான மூவண்ணக் கொடியையும் வந்தே மாதரத்தையும் ஒன்றிணைத்து, அதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகளை இணைக்கின்றன.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் முழுவதும், தேசியக்கொடி உணர்வு வெளிப்பட்டு வருகிறது.
பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை, மூவண்ணக் கொண்டாட்டம் ஒரு மகிழ்ச்சியான காட்சியாக மாறியுள்ளது. தேசியக் கொடியின் வண்ணங்களில் தீட்டப்பட்ட ரங்கோலிகள், ஆகியவை இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஒரு தனித்துவமான தன்மையை அளித்துள்ளன.
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு, இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கு ஒரு சிறப்புமிக்க வரலாற்று பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்தியர்களுக்கு, வந்தே மாதரம் உத்வேகத்தின் ஊற்றாக இருந்து வந்துள்ளது.
இவ்விரண்டையும் ஒன்றிணைப்பது, இந்தியாவின் கடந்த காலத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் இடையே ஒரு இயல்பான தொடர்பை உருவாக்குகிறது.
இந்த ஆண்டு, வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், தலைமுறை தலைமுறையாக சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த அந்த வார்த்தைகள், தொடர்ந்து எதிரொலித்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300096®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2300209)
आगंतुक पटल : 8