சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்களுக்கான தேசிய மன்றத்தின் 5-வது கூட்டத்திற்கு மத்திய திரு டாக்டர் வீரேந்திர குமார் தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
14 AUG 2026 7:52PM by PIB Chennai
மூத்த குடிமக்களுக்கான தேசிய மன்றத்தின் 5-வது கூட்டம், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில், இன்று (14.08.2026) தேசிய தலைநகரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது.
மூத்த குடிமக்களின் நலன், சுகாதாரம், மேம்பாடு தொடர்பான முக்கிய கொள்கை விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற இக்கூட்டத்தில், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மூத்த குடிமக்கள் பிரிவின் இணைச் செயலாளர் திருமதி மோனாலி பி. தாகடே, மன்றத்தின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சகங்கள்/துறைகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வல்லுநர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மூத்த குடிமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் வீரேந்திர குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, ஒவ்வொரு மூத்த குடிமகனும் கண்ணியம், பாதுகாப்பு, நல்ல ஆரோக்கியம், சமூகத்தில் தீவிரப் பங்களிப்புடன் கூடிய வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்று கூறினார். மூத்த குடிமக்களின் நலன், மேம்பாடு ஆகியவை வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும் என்று அவர் தெரிவித்தார்., அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்துத் தரப்பினரும் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299580®=3&lang=1
(Release ID : 2299580)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2299709)
आगंतुक पटल : 6