தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிஎஸ்என்எல் வாழ்த்து; வாடிக்கையாளர் நலன் சார்ந்த புதிய டிஜிட்டல் முன்முயற்சிகளைம் அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
14 AUG 2026 6:31PM by PIB Chennai
நாட்டின் 80-வது சுதந்திர தின நல்வாய்ப்பை முன்னிட்டு, பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL-பிஎஸ்என்எல்) தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், பாரதத்தின் அனைத்து மக்கள், இணை நிறுவனங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவின் நம்பகமான பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக, பிஎஸ்என்எல் நாடு முழுவதும் நம்பகமான, பாதுகாப்பான, மலிவு விலையிலான, அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் இணைப்பை வழங்குவதில் உறுதியாக உள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துதல், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மேம்பட்ட இணைப்பு மற்றும் பொழுதுப்போக்கை எளிதில் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட புதிய சிறப்புச் சலுகைகளை பிஎஸ்என்எல் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
1. ரூ. 1 ஃப்ரீடம் 2.0 சலுகை
2. பிஎஸ்என்எல் ஃபைபர் ஃப்ரீடம் திட்டம் – அறிமுகச் சலுகை: மாதம் ₹1,111
3. வாடிக்கையாளர்களுக்கான புதிய சுயப் பராமரிப்பு மொபைல் செயலியின் அறிமுகம்
4. பிஎஸ்என்எல் இலவச பொழுதுப்போக்கு டிவி (டாங்கோ டிவியால் இயக்கப்படுகிறது)
5. பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி சேவைகள்
6. ₹ 2399 திட்டத்திற்கான கூடுதல் செல்லுபடி காலம்
7. பிஎஸ்என்எல்–பாலிகேப் நிறுவன ஒத்துழைப்பின் கீழ் இந்தியாவில் கூட்டு தொலைத்தொடர்பு உற்பத்தி
ஆகியவற்றை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் பெருமைமிக்க தருணத்தில், தேசத்திற்குச் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்கும், டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்குப் பங்களிப்பதற்கும் தனது உறுதிப்பாட்டை பிஎஸ்என்எல் மீண்டும் எடுத்துரைக்கிறது.
பிஎஸ்என்எல் அனைத்து மக்களுக்கும் 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299517®=3&lang=1
(Release ID : 2299517)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2299702)
आगंतुक पटल : 9