ஆயுஷ்
ஆயுஷ் மருத்துவக் கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 AUG 2026 3:11PM by PIB Chennai
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல், பரவலாக அணுகச் செய்தல் ஆகியவற்றை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சிலின் அங்கமான, ஹைதராபாத்தில் உள்ள தேசிய இந்திய மருத்துவப் பாரம்பரிய நிறுவனம், தனது மருத்துவக் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பை முறைப்படி டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக, கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குமரநல்லூரில் உள்ள சேவாதி அருங்காட்சியகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கேரளாவின் வளமான மருத்துவ, அறிவுசார் மரபுகளுடன் தொடர்புடைய மதிப்புமிக்க கையெழுத்துப் பிரதி வளங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான கூட்டு முயற்சியாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.
இந்த நிறுவனத்தால் பாதுகாக்கப்படும் கையெழுத்துப் பிரதித் தொகுப்பில், ஆயுர்வேதம், அது சார்ந்த பாரம்பரிய அறிவுத் துறைகள் தொடர்பான அரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் அடங்கியுள்ளன. இந்தக் கையெழுத்துப் பிரதிகளில் பல, இந்திய அறிவு அமைப்பில் மருத்துவச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சி, சிகிச்சை முறைகள், மூலிகை மருந்துகள், நோயறிதல் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299380®=48&lang=2
(Release ID : 2299380)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2299659)
வருகையாளர் எண்ணிக்கை : 31