தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேசத்தில், சிம்லா, சோலன் உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரம் குறித்த மதிப்பீடுகளை ட்ராய் வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 14 AUG 2026 1:52PM by PIB Chennai

தொலைத்தொடர்புச் சேவைகளைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் வகையில் இமாச்சலப் பிரதேசத்தில், சிம்லா, சோலன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரம் குறித்த சோதனைகளின் முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.

மொபைல் சேவைகளை வழங்குவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் சேவை வழங்கும் நிறுவனங்களின் குரல் மற்றும் தரவு ஆகிய இரண்டு சேவைகளின் தரத்தை நிகழ் நேரத்தில் சோதனை செய்வதை இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்தச் சோதனையின்போது அழைப்பு துண்டிப்பு விகிதம், தடையற்ற அழைப்புகள், தரவுகளின் பதிவேற்றம், பதிவிறக்கம் போன்ற பல்வேறு சேவைகளின் செயல்திறத்தை ட்ராய் மதிப்பீடு செய்தது.

இந்தச் சோதனைகள் முக்கிய நகரங்கள், பொது இடங்கள், போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில் மொபைல் சேவைகளின் தரம் குறித்து மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பான முடிவுகள் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299344&reg=48&lang=2

****

TV/SV/GS/SH


(रिलीज़ आईडी: 2299602) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी