மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
எதிர்காலத் திறன்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 5.89 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி: மத்திய அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ்
प्रविष्टि तिथि:
14 AUG 2026 11:46AM by PIB Chennai
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் எதிர்காலத் திறன்கள் பிரைம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 5,89,429 பேர் பல்வேறு பயிற்சிகளில் சேர்ந்துள்ளதாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 12.08.2026 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இவர்களில் 3,61,336 பேர் பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு, இணைய வர்த்தகம், பிளாக்செயின், செமிகண்டக்டர் வடிவமைப்பு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தொழில்துறையின் தேவைக்கு ஏற்ப இத்திட்டம் பயிற்சிகளை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எதிர்காலத் திறன்கள் பிரைம் இணையதளத்தில் 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள நிலையில், 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்றுள்ளதாகவும், இதில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022-23 நிதியாண்டு முதல் 2025-26 வரை ஒட்டுமொத்தமாக இத்திட்டத்திற்கு ரூ.204.619 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நடப்பாண்டில் ரூ.137.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299303®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2299537)
आगंतुक पटल : 19