அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தமிழ்நாட்டில் 384 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
13 AUG 2026 3:48PM by PIB Chennai
மத்திய அரசின் உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் (INSPIRE-SHE) கீழ் தமிழ்நாட்டில் 384 மாணவர்களுக்கு ரூ.6.51 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இத்திட்டம் தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருவதாக கூறினார். அறிவியல் துறையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் உயர்கல்விக்கான உதவித்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 1,36,298 மாணவர்கள் பயனடைந்துள்ள நிலையில், மொத்தம் ரூ.2,784.15 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசு பல்வேறு உதவித்தொகைத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298886®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2299260)
வருகையாளர் எண்ணிக்கை : 43