ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) இரண்டாம் கட்டத்தின் கீழ் 5.63 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் திரவக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
13 AUG 2026 4:51PM by PIB Chennai
சுகாதாரம் என்பது, மாநிலப் பட்டியலிலுள்ள ஒரு அம்சமாகும். தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) இரண்டாம் கட்டம் என்பது சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் அவற்றின் அதிகார வரம்பிற்குள் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி உதவித் திட்டமாகும். இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2020 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டது. இது திறந்தவெளி கழிப்பிடமற்ற நிலையைத் தக்கவைத்தல், திட, திரவக்கழிவு மேலாண்மை, கிராமங்களில் தூய்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) ஒருங்கிணைந்த மேலாண்மை தகவலில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவல்களின்படி 2026 ஆகஸ்ட் 7 நிலவரப்படி மொத்தமுள்ள 5,86,944 கிராமங்களில் 5,63,809 கிராமங்களில் திரவக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை ஜல் சக்திதுறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298960®=3&lang=1
****
TV/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2299258)
आगंतुक पटल : 7