அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புத்தாக்கச் சூழல் அமைப்பின் வளர்ச்சி
प्रविष्टि तिथि:
13 AUG 2026 3:47PM by PIB Chennai
ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கம், தொழில் பாதுகாப்பு, மாதிரி உருவாக்கம், அறிவுசார் சொத்துரிமை உருவாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றம், தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தொழில் வளர்ச்சி ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம், நாடு முழுவதும் புத்தாக்கச் சூழலமைப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு கொள்கை, நிறுவன, நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாட்டில் ஆராய்ச்சி, மேம்பாட்டுச் சூழலமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு, அறிவியல் - தொழில்நுட்பத் துறையின் கீழ் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதும், தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப பல்துறை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வகங்களில் புத்தாக்கக் கலாச்சாரத்தை வளர்ப்பது இதன் தலையாய நோக்கமாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, ஆறு ஆண்டுகளில் ₹1 லட்சம் கோடி மூலதனத்துடன் ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க (RDI-ஆர்டிஐ) நிதியத்தை அரசு நிறுவியுள்ளது.
மாநில அறிவியல், தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், மாநில / யூனியன் பிரதேச அளவிலான அறிவியல், தொழில்நுட்ப்ப், புத்தாக்கச் சூழலமைப்புகளை வலுப்படுத்துவதற்காக, மாநில அறிவியல் - தொழில்நுட்ப மன்றங்களுக்கு மானிய உதவி வழங்குவதன் மூலம் மத்திய-மாநில ஒத்துழைப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2028) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298884®=3&lang=1
(Release ID : 2298884)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2299254)
आगंतुक पटल : 6