பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தகவல் ஆணையத்தால் முடித்துவைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பான உண்மை நிலவரம்

प्रविष्टि तिथि: 13 AUG 2026 4:12PM by PIB Chennai

ஆகஸ்ட் 2026-ல் மேல்முறையீடுகள், புகார்கள் மீதான தீர்வு குறித்த ஒரு ஊடக செய்தியை மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கவனத்தில் கொண்டு, உண்மை நிலவரத்தைப் பொதுமக்களின் முன் வைப்பது அவசியம் எனக் கருதுகிறது.

 

அந்தச் செய்தியில், ஆகஸ்ட் 2026-ல் வழக்குகள் முடித்துவைப்பு தொடர்பான புள்ளி விவரங்களில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மேல்முறையீடுகள் மட்டுமே முடித்துவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மாறாக, நடப்பு மாதத்தில் 12 ஆகஸ்ட் 2026 வரை ஆணையம் உண்மையில் 768 வழக்குகளை முடித்துவைத்துள்ளது. முடித்துவைக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஒரே நேரத்தில் தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

 

ஆணையத்தின் இரண்டாவது மேல்முறையீடுகள், புகார்கள் இணையதளம் 2 ஆகஸ்ட் 2026 முதல் மேம்படுத்தப்பட்டு வருகிறது . இதன் விளைவாக, அந்த இணையதளத்திலிருந்து ஆணையத்தின் இணையதளத்தில் தானாகவே புதுப்பிக்கப்படும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் தொடர்பான தரவுகள், 1 ஆகஸ்ட் 2026 வரை மட்டுமே புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இணையதள மேம்பாடு தொடர்பான அறிவிப்பு , 24 ஜூலை 2026 அன்றே ஆணையத்தின் இணையதளத்திலும் மேல்முறையீடுகள், புகார்கள் இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.

 

இணையதளத் தரவுகள் புதுப்பிக்கப்படாதது ஆணையத்தின் செயல்பாட்டையோ அல்லது விசாரணைகள் நடத்தப்படுவதையோ பாதிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியம் . இணையதள மேம்படுத்தல் நடைபெற்ற காலகட்டத்தில், ஆணையத்தின் முன்பான விசாரணைகள் வழக்கம் போல் தொடர்கின்றன.

 

எனவே , இணையதள மேம்படுத்தல் காலத்தில் அதன் இணையதளத்தில் தற்போது காணப்படும் புள்ளிவிவரங்கள், ஆகஸ்ட் 2026-ம் ஆண்டில் வழக்குகளின் உண்மையான தீர்ப்பைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படக்கூடாது என்பதை ஆணையம் வலியுறுத்த விரும்புகிறது .

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298921&reg=3&lang=1

(Release ID : 2298921)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299245) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Telugu