பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன: மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தகவல்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:20PM by PIB Chennai
நாடு முழுவதும் பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் 508 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அவர் அளித்துள்ள தகவலின்படி, 2026 ஆகஸ்ட் 13 நிலவரப்படி நாடு முழுவதும் 508 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதன்படி, தமிழ்நாட்டில் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
பழங்குடியின மாணவர்களின் கல்வி முன்னேற்றம், அவர்களுக்கான தரமான தங்குமிட வசதி, கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298821®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2299240)
आगंतुक पटल : 6