அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நடவடிக்கைகளை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
13 AUG 2026 3:49PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) தனது ஆய்வகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்துறையினர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, உள்நாட்டுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வணிகமயமாக்கலை ஊக்குவிக்க வலுவான நிறுவன கட்டமைப்புகளை அமைத்துள்ளது.
சிஎஸ்ஐஆர் தலைமையகம் மற்றும் அதன் உறுப்பு ஆய்வகங்களில் செயல்படும் வணிக மேம்பாட்டுக் குழுக்கள், தொழில் கூட்டாண்மை, தொழில்நுட்பப் பரிமாற்றம், உரிமம் வழங்குதல், ஒப்பந்த ஆராய்ச்சி மற்றும் ஆலோசகர் சேவைகளை எளிதாக்குகின்றன. தொழில்நுட்பங்களைச் சந்தைப்படுத்துவதைக் கூர்மைப்படுத்தக் கண்காட்சிகள், சந்திப்புகள் மற்றும் கண்டுபிடிப்புப் பட்டறைகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
தொழில்துறை ஆதரவுக்காகத் தேர்வுசெய்யப்பட்ட ஆய்வகங்களில் தொடக்க நிறுவனங்களுக்கான தொழில் தொடக்க மையங்கள் நிறுவப்பட்டு, நவீன ஆராய்ச்சி உள்கட்டமைப்புகள், மாதிரிப் பொருள் உருவாக்கம், அறிவுசார் சொத்துரிமை வழிகாட்டுதல் மற்றும் முதலீட்டாளர்களுடனான இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைச் சிஎஸ்ஐஆர் ஊக்குவிக்கிறது. தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை சர்வதேசத் தரத்திற்கு வலுப்படுத்த உலகளாவிய சிறந்த நடைமுறைகளையும் அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இத்தகவலை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298888®=3&lang=1
****
TV/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2299239)
வருகையாளர் எண்ணிக்கை : 38