சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ரத்தசோகை இல்லா இந்தியா இயக்கம் குறித்த இரண்டு நாள் பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
13 AUG 2026 4:38PM by PIB Chennai
புதுதில்லியில் ரத்தசோகை இல்லா இந்தியா இயக்கம் குறித்த இரண்டு நாள் (ஆகஸ்ட் 12,13) பயிலரங்கிற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இப்பயிலரங்கில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், கல்வி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பஞ்சாயத்துராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, பழங்குடியினர் நலன் ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருத்தப்பட்ட ரத்தசோகை இல்லா இந்திய இயக்கத்தின் செயல்பாடுகளை அமல்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து இப்பயிலரங்கில் கவனம் செலுத்தப்பட்டது.
இப்பயிலரங்கில் உரையாற்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் திருமதி புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா, ரத்தசோகையை முழுமையாக எதிர்கொள்வதற்கு சிறந்த ஒருங்கிணைப்பு, பரிசோதனைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், சேவை வழங்கல் தளங்கள் மூலம் சுகாதாரத் திட்டங்கள் தொடர்பாக வலுவான ஒருங்கிணைப்பையும் அமைச்சகங்களுக்கிடையே நெருங்கிய ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298947®=3&lang=1
****
TV/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2299238)
आगंतुक पटल : 6