சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியஸ்தம் உள்ளிட்ட மாற்றுத் தீர்வு வழிமுறைகளை அரசு ஊக்குவித்து வருகிறது

प्रविष्टि तिथि: 13 AUG 2026 3:49PM by PIB Chennai

மத்தியஸ்தம் உள்ளிட்ட மாற்றுத் தகராறு தீர்வு வழிமுறைகளை அரசு ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் இந்த வழிமுறைகள் தகராறுகளைத் தீர்ப்பதற்கான வழக்கமான முறைகளுக்கு ஒரு சிறந்த மாற்றை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன.

 

மத்தியஸ்தச் சட்டம் - 2023,  தகராறில் தொடர்புடைய தரப்பினர், குறிப்பாக நிறுவன மத்தியஸ்தம் போன்றவற்றில் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வ கட்டமைப்பை வகுக்கிறது. இதில், நாட்டில் ஒரு வலுவான, செயல்திறன் மிக்க மத்தியஸ்த சூழலமைப்பை நிறுவுவதற்காக பல்வேறு தரப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சட்டத்தின் பிரிவு 31, தகராறு தீர்ப்பதற்கான ஒரு விரும்பத்தக்க முறையாக மத்தியஸ்தத்தை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் உள்ள மத்தியஸ்த சேவை வழங்குநர்களை அங்கீகரிப்பதற்கும், இந்திய மத்தியஸ்த மன்றத்தை ஒரு தேசிய அளவிலான அமைப்பாக நிறுவுவதற்கு வழிவகை செய்கிறது.

 

மேலும் , இச்சட்டத்தின் பிரிவு 43, எந்தவொரு பகுதி அல்லது வட்டாரத்தின் மக்கள் அல்லது குடும்பங்களுக்கு இடையே அமைதி, நல்லிணக்கம், நிம்மதியைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு தகராறையும் சமூக மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதற்கு வழிவகை செய்கிறது.

 

மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே திறன் மேம்பாட்டிற்கும், உயர் நீதிமன்றங்கள், தேசிய சட்டப் பணிகள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு6 தரப்பினருடன் அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

 

மார்ச் 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் 452 மாற்றுத் தகராறு தீர்வு மையங்களும் 1,394 சமரச மையங்களும் செயல்பட்டு6 வருகின்றன. மொத்தம் 4,681 நீதித்துறை அதிகாரிகள், 10,124 வழக்கறிஞர்கள், 753 இதர சமரசப் பேச்சாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டுப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298890&reg=3&lang=1

(Release ID : 2298890)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299236) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी