சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
இ- நீதிமன்றங்கள் தொடர்பான ஒருங்கிணைந்த செயல்திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 AUG 2026 3:46PM by PIB Chennai
நீதித்துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இ-நீதிமன்றங்கள் திட்டப்பணி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 3-வது கட்டம், ஆவணங்களை பெருமளவில் டிஜிட்டல் மயப்படுத்துதல், மெய்நிகர் விசாரணைகளை பரவலாகப் பயன்படுத்துதல், நீதி அமைப்புகளிடையே செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கொண்டு செல்லுதல் போன்றவற்றை நோக்கிய ஒரு மாற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இ-நீதிமன்றங்கள் செயல்திட்டத்தின் செயலாக்கத்தில் ஜஸ்ட் ஐஎஸ் (JustIS) செயலி மூலம் வழக்கு நிர்வாகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் வழக்குகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் உதவுகிறது. வழக்குகள், அது தொடர்பான விண்ணப்பங்களை இணையவழியில் தாக்கல் செய்வதை எளிதாக்கும் இ-தாக்கல் முறை, நீதிமன்றக் கட்டணங்களை இணையவழியில் செலுத்துவதற்கான இ-கட்டண முறை ஆகியவற்றின் மூலம் இது டிஜிட்டல் முறையை வலுப்படுத்தியுள்ளது.
சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298885®=3&lang=1
(Release ID : 2298885)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2299235)
வருகையாளர் எண்ணிக்கை : 55