புவி அறிவியல் அமைச்சகம்
உள்நாட்டு பேரிடர் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:17PM by PIB Chennai
நாட்டின் நிலநடுக்கப் பாதிப்புகளைக் கண்காணிக்க தேசிய நில அதிர்வு மையம் 174 மையங்களைக் கொண்ட தேசிய வலையமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம், முதன்மைப் பேரலைகளைக் கண்டறிந்து, நிலநடுக்கக் சுழல் எச்சரிக்கை அமைப்பை முன்னோடித் திட்டமாக உருவாக்கி வருகிறது.
இமாச்சலப் பிரதேசம் போன்ற மலைப் பகுதிகளில் ஏற்படும் மேகவெடிப்பு உள்ளிட்ட தீவிர வானிலை பேரிடர்களைக் கண்காணிக்க 'மிஷன் மௌசம்' திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 50 டாப்ளர் வானிலை ராடார்கள், 1,008 தானியங்கி வானிலை மையங்கள் மற்றும் 6,885 மழை அளவிடும் நிலையங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இடி-மின்னல் போன்ற பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து ‘மின்னல் அபாயத் தணிப்புத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்னல் தொடர்பான உடனடி எச்சரிக்கைகளையும், இருப்பிடம் சார்ந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் 17 மாநில மொழிகளில் வழங்கும் 'டாமினி' என்ற சிறப்பு மொபைல் செயலியையும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது.
இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298817®=3&lang=1
***
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2299173)
आगंतुक पटल : 7