புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வானிலை முன்னறிவிப்புத் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 13 AUG 2026 2:12PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு மையம், பருவமழை குறித்த நீண்டகால முன்னறிவிப்புகளைத் துல்லியமாக வழங்கப் பல்முனை மாதிரிகள் ஒருங்கிணைப்பு முறையைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் முன்னறிவிப்புகளில் ஏற்படும் பிழைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. 2016-2020 காலக்கட்டத்தில் 7.8 சதவீதமாக இருந்த சராசரிப் பிழை விகிதம், 2021-2025 காலக்கட்டத்தில் 2.2 சதவீதமாகக் குறைந்து, முன்னறிவிப்புகளின் துல்லியம் உயர்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் நிலவும் பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டங்களாகப் பருவமழை முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

பேரிடர் முன்னெச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த டாப்ளர் வானிலை ரேடார்கள், தானியங்கி வானிலை மையங்களை நிறுவுதல், புதிய உயர்திறன் கணினிகளைப் பயன்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை இணைத்தல், 'மிஷன் மௌசம்' திட்டத்தின்கீழ் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வானிலை எச்சரிக்கைகள், பேரிடர் முன்னறிவிப்புகள் போன்றவை மொபைல் செயலிகள், குறுஞ்செய்திகள், ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் இணைமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298810&reg=3&lang=1

***

SS/SE/SH

 


(रिलीज़ आईडी: 2299170) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी