பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தெலங்கானாவில் 23 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன
प्रविष्टि तिथि:
13 AUG 2026 1:54PM by PIB Chennai
பழங்குடியின மாணவர்களுக்கு அவர்கள் சார்ந்த சூழலில், உள்ளூர் கலை, கலாச்சாரத்தை பாதுகாத்து தரமான கல்வியை அளிக்கும் வகையில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி திட்டத்தை பழங்குடியினர் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது என்று மத்தியப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஒரம் இன்று அவையில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 50 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடியினர் மக்கள் தொகையையும், குறைந்தது 20,000 பழங்குடியினரையும் கொண்ட பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் இந்த ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. இதுவரை, மொத்தம் 728 பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில், நாடு முழுவதும் 508 பள்ளிகள் செயல்படுகின்றன. அத்துடன் 2025-26-ம் கல்வியாண்டில் இப்பள்ளிகளில் 1,56,593 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் 23 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வருவதுடன் 2025-26-ம் கல்வியாண்டில் 10,199 மாணவர்கள் சேர்ந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298789®=3&lang=1
***
SS/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2299165)
आगंतुक पटल : 7