பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
வனச் செல்வ மேம்பாட்டு மையத் தொகுப்புகளின் நிலை
प्रविष्टि तिथि:
13 AUG 2026 1:56PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஒரம், அவையில் இன்று, ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம், பிரதமரின் பழங்குடியினர் நீதிக்கான பெரும் இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு மூலம் வனச் செல்வ மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்கு பழங்குடியினர் நல அமைச்சகம் நிதி உதவி வழங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களின் கீழ், 28 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மொத்தம் ரூ.642.19 கோடி மதிப்பீட்டில் 12.94 லட்சம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் 4,712 வனச் செல்வ மேம்பாட்டு மையங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 3,406 வனச் செல்வ மேம்பாட்டு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஒரு வனச் செல்வ மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கும் அதற்கான மூலப்பொருட்கள், பயிற்சி, திறன் மேம்பாடு, கருவிகள், வழிகாட்டுதல்கள் கட்டணம், ஆகியவற்றைக் மேற்கொள்வதற்கும் மாநில அரசுகளுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298790®=3&lang=1
***
SS/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2299163)
आगंतुक पटल : 7