பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினருக்கான கல்வி, வீட்டு வசதித்திட்டங்கள்

प्रविष्टि तिथि: 13 AUG 2026 2:05PM by PIB Chennai

நாடு முழுவதும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக ஐந்து கல்வி உதவித்திட்டங்கள் அமல்படுத்தபட்டு வருவதாக பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மக்களவையில் இன்று தெரிவித்தார். அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாகக் கூறினார்.

ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பயிலும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமும், பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி பயிலும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், உயர்கல்வி பயிலும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தேசியக் கல்வி உதவித்தொகைக்கு ரூ.6.00 லட்சமும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகைக்கு ரூ.6.00 லட்சமும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய உயர்கல்வி ஆய்வுக்கான கல்வி உதவித்தொகைக்கு வருமான உச்சவரம்பு கிடையாது.

அத்துடன், பழங்குடியினர் நலத்துறையின் கீழ், அவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட தேசியப் பழங்குடியினர் நிதி, மேம்பாட்டுக்கழகம் கேரளா உட்பட நாடு முழுவதும் தமது முகமைகள் மூலம் தகுதியுடைய பழங்குடியினருக்கு கடன்களை அளிக்கிறது. இக்கடன்கள், கல்விக்கடன் உட்பட வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் அல்லது சுயதொழில் முயற்சிகளுக்கு வழங்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298800&reg=3&lang=1

***

SS/IR/PS/SH   


(रिलीज़ आईडी: 2299151) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी