விண்வெளித்துறை
விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:03PM by PIB Chennai
கடந்த மூன்று ஆண்டுகளில் செலுத்தப்பட்ட முக்கிய செயற்கைக்கோள் திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
2023 ஜூலை 14 அன்று ஏவப்பட்ட சந்திரயான்-3, 2023 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் முதன்முறையாக மென்மையாகத் தரையிறங்கியதுடன், பாதுகாப்பான தரையிறக்கம், ரோவர் வழிசெலுத்தல், கந்தகத்தைக் கண்டறிதல், நிலவு மண் வெப்பநிலை அளவீடுகள் ஆகியவற்றையும் செய்தது.
2023 செப்டம்பர் 2-ம் தேதி செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 , இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆய்வகமாகும். இது சூரிய ஒளிவட்டம், ஒளிமண்டலம், நிறமண்டலம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, 2024 ஜனவரியில் சூரியன்-பூமி எல்1-ஐ சுற்றி ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
2024 ஜனவரி 1 அன்று செலுத்தப்பட்ட எக்ஸ்போசாட், பல்சர்கள், கருந்துளைகள் உள்ளிட்ட பிரகாசமான வானியல் ஊடு கதிர் (எக்ஸ்-கதிர்) மூலங்களை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பிரத்யேக ஊடு கதிர் போலரிமெட்ரி திட்டமாகும்.
2024 டிசம்பர் 30 அன்று செலுத்தப்பட்ட ஸ்பேடெக்ஸ் விண்வெளி இணைப்புச் சோதனை), தானியங்கி முறையில் விண்கலத்தை இணைத்தல்/பிரித்தல், ஆற்றல் பரிமாற்றம், உலகைச் சுற்றி வருதல் ஆகியவற்றைச் செய்தது. இதன் மூலம், எதிர்கால மனித விண்வெளிப் பயணங்களுக்கான விண்வெளி இணைப்புத் தொழில்நுட்பத்தைச் செய்து காட்டிய நான்காவது நாடாக இந்தியா திகழ்கிறது.
2025 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று செலுத்தப்பட்ட நிசார் , முழுமையான போலரிமெட்ரிக், இன்டர்ஃபெரோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி உலகளாவிய நுண்ணலை படமெடுப்புக்காக நாசா, இஸ்ரோ ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட முதல் இரட்டை அதிர்வெண் ரேடார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
ஜிசாட்-7ஆர் (சிஎம்எஸ்-03) என்பது இந்தியக் கடற்படையின் உத்திசார் தொடர்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட, இந்தியாவின் மிகவும் மேம்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ராணுவத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298798®=3&lang=1
---
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2299140)
आगंतुक पटल : 10