புவி அறிவியல் அமைச்சகம்
வானிலை முன்னறிவிப்பிற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் புவிசார் தொழில்நுட்பங்கள்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:16PM by PIB Chennai
இந்தியாவில் தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மூன்று செயற்கை நுண்ணறிவு சார்ந்த உலகளாவிய வானிலை மாதிரிகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் மூலம் புயல், கனமழை போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கண்காணித்து, உடனுக்குடன் முன்னறிவிப்புகளை வழங்கும் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் 'பல்வகை அபாய முன்னெச்சரிக்கை முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு' என்ற இணையம் சார்ந்த புவிசார் தளத்தை உருவாக்கியுள்ளது. இத்தளம் வானிலை முன்னறிவிப்புகளை புவிசார் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து, புயல், கனமழை, இடி-மின்னல் போன்ற பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கும், மத்திய-மாநில பேரிடர் மேலாண்மை முகமைகளுக்கும் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குகிறது.
வானிலை மற்றும் புவி அறிவியல் ஆராய்ச்சிகளை மேம்படுத்த ஒடிசா உட்பட நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புவி அறிவியல் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. மேலும், நாட்டினை வானிலை பேரிடர்களை எதிர்கொள்ளத் தயார்படுத்தும் 'மிஷன் மௌசம்' திட்டமும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298815®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2299105)
आगंतुक पटल : 14