சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மணிப்பூரில் பாதுகாப்பான உறைவிடங்கள் மூலம் பெண்கல்விக்கு ஊக்கம்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 6:02PM by PIB Chennai
தொலைதூர மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்குப் பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான உறைவிட வசதிகள் மிகவும் அவசியமாகின்றன. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கில் உள்ள தனமஞ்சூரி பல்கலைக்கழகத்தில் 'பிரதமரின் பட்டியல் சமூகத்தினருக்கான முன்னேற்றத் திட்டத்தின்' கீழ் 100 படுக்கைகள் கொண்ட பட்டியல் மாணவிகளுக்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
2022-23ம் ஆண்டில் ₹3.50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த விடுதி, மணிப்பூரின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளுக்குப் பெருமளவில் உதவி வருகிறது. மாநிலத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான தனமஞ்சூரி பல்கலைக்கழகத்தில் அனைத்து மாவட்ட மாணவர்களும் பயின்று வரும் நிலையில், இவ்விடுதி அவர்களுக்குப் பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.
தனியார் விடுதிகளின் சிரமங்கள் மற்றும் தினசரிப் பயணச் சுமைகளின்றிப் பாதுகாப்பான சூழலில் மாணவிகள் கல்வி பயில இவ்விடுதி வழிவகுத்துள்ளது. குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான வாய்ப்பையும் கல்வி வளர்ச்சியையும் இத்திட்டம் கணிசமாக உயர்த்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298467®=3&lang=1
செய்தி அடையாள எண் 2298467
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2298700)
आगंतुक पटल : 6