ஆயுஷ்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழுவின் 3-வது கூட்டம்

प्रविष्टि तिथि: 12 AUG 2026 5:33PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழுவின் 3-வது கூட்டம் புதுதில்லியில் உள்ள கர்த்தவ்யா பவனில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், "இந்தி ஆலோசனைக் குழு என்பது வெறும் முறைசார்ந்த அமைப்பு அல்ல; ஆட்சி மொழியான இந்தியை அமைச்சகத்தில் வலுப்படுத்தவும், மக்கள் நலன் சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகமாகவும் திகழ்கிறது. 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்திய மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்" எனக் குறிப்பிட்டார். மேலும், அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா, அமைச்சகத்தின் பணிகள், இணையதளம் மற்றும் வெளியீடுகளில் இந்திப் பயன்பாட்டை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கினார். இக்கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் 'அப்ரதிம் ஆயுஷ்' என்ற இந்தி இதழ் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298425&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2298425

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2298696) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी