மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: சிபிஎஸ்இ விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவி
प्रविष्टि तिथि:
12 AUG 2026 6:36PM by PIB Chennai
சிபிஎஸ்இ விளையாட்டுப் போட்டிகள், விரிவான சிபிஎஸ்இ விளையாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன. தொகுப்பு, மண்டலம் மற்றும் தேசிய அளவில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சில விளையாட்டுப் போட்டிகள் நேரடியாகத் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. ஏற்பாடு செய்யும் பள்ளிகள் இணையவழி விண்ணப்பங்கள், மண்டல விளையாட்டுக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் தேசிய விளையாட்டுக் குழுவின் இறுதி முடிவு ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
சிபிஎஸ்இ விளையாட்டுப் போட்டிகளுக்கான வழிகாட்டுதல்களின்படி, நேர்மையான செயல்பாட்டை உறுதிசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட விளையாட்டிற்கான மாவட்டம் அல்லது மாநில அளவிலான விளையாட்டுச் சங்கங்கள் அல்லது கூட்டமைப்புகளிலிருந்து தொழில்நுட்பத் தகுதியும் அனுபவமும் வாய்ந்த நடுவர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு போட்டியை நடத்தும் பள்ளியையே சாரும்.
போட்டிகளை நடத்தும் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ ஒரு நிலையான விளையாட்டு மானியத்தை வழங்குகிறது. தற்போதைய வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி, தொகுப்பு/ மண்டல அளவிலான போட்டிகளுக்கு ரூ. 2 லட்சமும், தேசிய அளவிலான போட்டிகளுக்கு ரூ. 3 லட்சமும்,
தொகுப்பு/ மண்டல அளவிலான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளுக்கு ரூ. 4 லட்சமும், தேசிய அளவிலான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளுக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்படுகின்றது.
கல்வித் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298509®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2298691)
आगंतुक पटल : 9