மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு வளாகங்கள்

प्रविष्टि तिथि: 12 AUG 2026 6:35PM by PIB Chennai

ஆஸ்திரேலியா, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), 16 ஒத்துழைப்புக் கடிதங்களை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனத்துடன்,  கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தலா ஆறு நிறுவனங்களுக்கும்,  தில்லி என்சிஆர் பகுதியில் உள்ள மூன்று நிறுவனங்களுக்கும் இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

ஐஐடி மெட்ராஸ், ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎம் அகமதாபாத் ஆகியவை முறையே 2023-ல் ஸான்ஸிபாரிலும், 2024-ல் அபுதாபியிலும், 2025-ல் துபாயிலும் தங்கள் வெளிநாட்டு வளாகங்களை நிறுவின. ஐஐடி மெட்ராசின் ஸான்ஸிபார் வளாகத்தில் இதுவரை 35 மாணவர்கள் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருங்கடல்கட்டமைப்புகள் ஆகிய துறைகளில் எம்.டெக் பட்டங்களைப் பெற்றுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரவு அறிவியல் மற்றும் வேதியியல் செயல்முறைப் பொறியியல் ஆகிய பல்வேறு இளங்கலைப் பட்டப்படிப்புகளில் பயின்று வருகின்றனர்.

 

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடியேற்றப் பிரிவு அளித்த தகவல்களின்படி, கல்வி சார்ந்த நோக்கங்களுக்காக  வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2021-ல் 445580 ஆக இருந்தது. இந்த இலக்கம், 2025-ல் 619264 ஆக உயர்ந்துள்ளது. 

 

மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜும்தார் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298507&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2298676) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी