உள்துறை அமைச்சகம்
உயிரியல் ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொள்ள அரசு தயார்நிலையில் உள்ளது: மத்திய இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய்
இடுகை இடப்பட்ட நாள்:
12 AUG 2026 4:48PM by PIB Chennai
உயிரியல் ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், தேசியப் பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்களின் கீழ் அவசரகாலத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் நிதி உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நோய்க் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மாநில அளவில் ஆய்வகக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் வைரஸ் ஆராய்ச்சி & கண்டறிதல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, நடமாடும் பாதுகாப்பு ஆய்வகங்களும் பயன்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் மூலம் மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகத் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298331®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2298675)
வருகையாளர் எண்ணிக்கை : 41