பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

प्रविष्टि तिथि: 12 AUG 2026 12:44PM by PIB Chennai

பழங்குடியின மாணவர்களின்  பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை, உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், நிதிப் பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் 'டிபிடி பழங்குடியினர் இணையதளம்' தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இணையவழிப் பயன்பாடு, நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் காகிதப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டு, விண்ணப்பப் பரிசீலனை காலதாமதம் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்த்து, நிதியை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க இம்முறை வழிவகுக்கப்பட்டுள்ளது

கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2023-24 முதல் 2025-26 வரை) கோடிக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் இத்திட்டங்களின் கீழ் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, 2025-26-ம் ஆண்டில் மட்டும் லட்சக்கணக்கான மாணவர்களின் விவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் தரவு சரிபார்ப்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. துர்காதாஸ் உய்கே மாநிலங்களவையில் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298081&reg=3&lang=1

 

*** 

SS/EA/SH


(रिलीज़ आईडी: 2298609) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी