புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 12 AUG 2026 12:37PM by PIB Chennai

'மிஷன் மௌசம்' திட்டத்தின் கீழ் நாட்டின் அவசரகால வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகள் கணிசமாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டு காலத்தில் கடுமையான வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத் தன்மை 40 முதல் 50 சதவீதம் வரை மேம்பட்டுள்ளதுடன், புயல்,  நிலச்சரிவு போன்றவற்றை துல்லியமாகக் கணிக்க முடிகிறது. நாடு முழுவதும் 50 டாப்ளர் வானிலை ரேடார்கள், 1,008 தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் 6,885 மழை அளவிடும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள 28 நாடுகளுக்கு இன்காய்ஸ்  நிறுவனம் சுனாமி எச்சரிக்கை சேவைகளை வழங்கி வருவதுடன், சென்னை, மும்பை நகரங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை அமைப்புகளும் செயல்பாட்டில் உள்ளன. தேசிய நிலஅதிர்வு அமைப்பு 174 தீவிர நிலையங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், தற்போதைய நிதியாண்டில் துருவ அறிவியல் மற்றும் பனிப்பாறை ஆராய்ச்சித் திட்டத்திற்காக ரூ.270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298069&reg=3&lang=1

*** 

SS/EA/SH


(रिलीज़ आईडी: 2298605) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी