புவி அறிவியல் அமைச்சகம்
கடல்வாழ் உயிரின வளங்களை ஆய்வு செய்ய விரிவான திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 AUG 2026 12:38PM by PIB Chennai
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் கொச்சியில் இயங்கும் கடல்வாழ் உயிரின வளங்கள் மற்றும் சூழலியல் மையம் மூலம் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் கடல்வாழ் உயிரின வளங்களை மதிப்பிடவும் கண்காணிக்கவும் விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் (2023-2026) கடல்வாழ் உயிரின வளங்கள் மற்றும் சூழலியல் மையம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன் வளங்கள், கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கத்தை மதிப்பிடுவதற்காக சுமார் 19 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இங்கு சேகரிக்கப்படும் அறிவியல் தரவுகள் மூலம் நிலையான மீன்வள மேலாண்மை, கடல் பாதுகாப்புக் கொள்கை வகுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், கடல்வாழ் மாதிரிகளைப் பாதுகாக்க 'பவசாகரா தேசிய களஞ்சியம்' செயல்பட்டு வருவதுடன், நவீன மரபணு குறிப்பு நூலகங்கள், மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298070®=3&lang=1
***
SS/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2298604)
வருகையாளர் எண்ணிக்கை : 46