உள்துறை அமைச்சகம்
போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு ஆகியவற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது - மத்திய இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 4:51PM by PIB Chennai
போதைப்பொருட்கள் உட்பட எல்லைத் தாண்டிய கடத்தலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன்கள், தானியங்கி வாகன எண் கண்டறியும் முறை போன்ற மேம்பட்ட கண்காணிப்பு உபகரணங்கள் நிறுவப்படுகிறது.
பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு, நடமாடும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த வேலி அமைத்தல், எல்லைக் காவல் நிலையங்கள், சாலைகள், ஹெலிகாப்டர் தளங்களை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிக்க ரோந்துப் பணிகள், சோதனைச் சாவடிகள், நடமாடும் குழுவினர் ஆகியவற்றின் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 222 மாவட்டங்களில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை 2020 ஆகஸ்ட் 15 அன்று போதைப்பொருள் இல்லா இந்தியா இயக்கத்தை தொடங்கியது. 2023 ஆகஸ்ட் முதல் இந்த இயக்கம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
இத்தகவலை, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298338®=3&lang=1
****
TV/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2298568)
आगंतुक पटल : 8