திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் 2.0: இளைஞர்களுக்குத் தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சி
प्रविष्टि तिथि:
12 AUG 2026 3:35PM by PIB Chennai
நாட்டின் இளைஞர்களுக்குத் தொழிற்துறை சார்ந்த பயிற்சி வழங்கும் நோக்கில், மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தை தொடங்கியது. 2022-23 நிதியாண்டு முதல் இத்திட்டம் 'தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் 2.0' ஆகச் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயிலும் பயன்பெறுநர்களுக்குத் தகுதியின் அடிப்படையில், உதவித்தொகையின் 25% பங்காக மாதம் ஒருவருக்கு அதிகபட்சமாக ₹1,500 வரை மத்திய அரசால் நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் 2.0-ன் கீழ் நாடு முழுவதும் இதுவரை ₹1,573.46 கோடி உதவித்தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழ்நாட்டிற்கு ₹181.44 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கேற்ப செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு மற்றும் 5ஜி நெட்வொர்க் உள்ளிட்ட தொழில்நுட்பப் பயிற்சிகள் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் வழங்கப்படுகின்றன.
மேலும், இப்பயிற்சியில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் 7.74 சதவீதமாக இருந்த பெண் பயிலுநர்களின் எண்ணிக்கை, 2025-26 நிதியாண்டில் 24.95 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இத்தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298225®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2298565)
आगंतुक पटल : 10