பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
'இ-கிராம் ஸ்வராஜ்' மூலம் டிஜிட்டல் பஞ்சாயத்து நிர்வாகத்தை வலுப்படுத்தல்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 2:34PM by PIB Chennai
தேசிய கிராம சுயராஜ்ய இயக்கத்தின் கீழ், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் 'இ-பஞ்சாயத்து திட்டத்தை' மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த 'இ-கிராம் ஸ்வராஜ்' தளம் பொது நிதி மேலாண்மை அமைப்பு, அரசு மின்னணு சந்தை, பாஷினி மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகிய டிஜிட்டல் தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபை கூட்டங்களின் விவாதங்கள் மற்றும் முடிவுகளைக் குரல்வழித் தொழில்நுட்பம் மூலம் தானாகத் தொகுத்து சுருக்கமாக வழங்கும் 'சபாசார்' என்ற செயற்கை நுண்ணறிவுச் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டில், நாட்டில் உள்ள 2,58,725 கிராம பஞ்சாயத்துகளில் 98.65% பஞ்சாயத்துகள் (2,55,251) தங்களது வளர்ச்சித் திட்டங்களை 'இ-கிராம் ஸ்வராஜ்' தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன. மேலும், 2,45,839 கிராம பஞ்சாயத்துகள் இத்தளம் மூலம் ₹57,337 கோடி மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொண்டுள்ளன.
இத்தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298159®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2298564)
आगंतुक पटल : 10