புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமில் கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது: மத்திய இணையமைச்சர் தகவல்

प्रविष्टि तिथि: 12 AUG 2026 12:36PM by PIB Chennai

அசாமில் ஜோர்ஹட், கோலாஹட், சிவசாகர், சராய்டியோ உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் 2026 ஜூலை 18 முதல் 20 வரை பெய்த கனமழை மற்றும் மிக கனமழைக்கு முன்னதாகவும், மழையின்போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே மாவட்ட அளவிலான மழை முன்னறிவிப்புகளையும் வண்ணக் குறியீடு அடிப்படையிலான எச்சரிக்கைகளையும் வெளியிட்டது. அம்மாநிலத்திற்கான இந்த முன்னறிவிப்புகள் கனமழை மற்றும் மிக கனமழை குறித்து ஏழு நாட்களுக்கு முன்பே கணித்ததோடு அடுத்த ஏழு நாட்களுக்கு வண்ணக் குறியீடு அடிப்படையிலான எச்சரிக்கைகளையும் உள்ளடக்கியதாகவும், மழைப் பொழிவின் தீவிரத்தை லேசான, மிதமான, கன மற்றும் மிக கனமழை என்று வகைப்படுத்துதல் மற்றும் பரவலின் அளவு போன்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வழிகாட்டுதல்கள் இதில் பின்பற்றப்பட்டது.

இத்தகவலை, மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298068&reg=3&lang=1

****

TV/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2298555) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी