புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்மேற்குப் பருவமழை முன்கணிப்பு

प्रविष्टि तिथि: 12 AUG 2026 12:39PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு மையம் நடப்பு 2026-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான முதல் கட்ட நீண்டகால முன்கணிப்பை 2026 ஏப்ரல் 13 அன்று வெளியிட்டது.  இதில், பருவமழையின் அளவு நீண்டகால சராசரியில் 92 சதவீதமாக இயல்பை விட குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.  எல் நினோ உருவாகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு இரண்டாம் கட்ட முன்கணிப்பில் நீண்டகால சராசரியில் 90 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது.  இந்த முன்கணிப்புகளுக்கு ஏற்ப ஜூன் மாதத்தில் இயல்பை விட 35% குறைவான மழை பதிவானது.  70% மாவட்டங்களில் மழைப் பற்றாக்குறை இருந்தது. 

நாட்டில் மத்தியப் பகுதியில் பெய்த கனமழைக் காரணமாக ஜூலை மாதத்தில் 1% அளவிற்கு கூடுதலாக மழைப் பெய்தாலும் கூட பிராந்திய ரீதியாக ஏற்றத்தாழ்வு இருந்தது.  47% மாவட்டங்களில் மழைப்பொழிவு பற்றாக்குறையாகவும் அல்லது பெரும் பற்றாக்குறையாகவும் இருந்தது.  2026 ஆகஸ்ட் 2 நிலவரப்படி, ஒட்டுமொத்த பருவமழையின் அளவு நீண்டகால சராசரியை விட 12% குறைவாக இருந்தது.  பருவமழைப்பொழிவில் ஏற்ற இறக்கங்கள் இருப்பினும் அந்த மழையளவு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தொடக்க கால முன்கணிப்புடன் ஒத்துப்போகிறது.

இத்தகவலை, மத்தியப் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298071&reg=3&lang=1

*** 

SS/IR/SU/KR


(रिलीज़ आईडी: 2298419) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali