கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் மூலம் 16.72 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனைக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 12 AUG 2026 11:27AM by PIB Chennai

நாட்டில் மின்சார வாகனங்கள், மின்னேற்ற நிலையங்கள் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ள திட்டங்களின் விவரங்களும் அதனால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துதல் உற்பத்தி செய்வதற்கான திட்டம் (ஃபேம் இந்தியா) இரண்டாம் கட்டம்: இத்திட்டத்தை மத்திய அரசு ரூ.11,500 கோடி பட்ஜெட் ஆதரவுடன் 01.04.2019 முதல் 31.03.2024 வரை 5 ஆண்டுகாலம் அமல்படுத்தியது.  இத்திட்டம், மின்சார இரு சக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான ஊக்கத்தொகையையும் மின்சாரப் பேருந்துகள், மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்ற நிலையங்கள் அமைப்பதற்கு மானியங்கள் ஆகியவற்றை வழங்கியது. மின்சார இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உட்பட சுமார் 16.72 லட்சம் மின்சார வாகனங்களின் விற்பனைக்கும் இத்திட்டம் ஆதரவு அளித்தது.  அத்துடன், 2026 ஜூலை 31 வரை 5,299 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.  மேலும், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்களை அமைக்க ரூ.912.50 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 9,583 மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298052&reg=3&lang=1

*** 

SS/IR/SU/KR


(रिलीज़ आईडी: 2298215) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada