கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேலூரில் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 11 AUG 2026 5:46PM by PIB Chennai

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் உட்பட நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், கூட்டுறவுத் துறை சார்ந்த முயற்சிகளை மாநில, மாவட்ட அளவில் திறம்பட ஒருங்கிணைக்கவும், செயல்படுத்தவும், கண்காணிக்கவும், மத்திய கூட்டுறவு அமைச்சகம் பல அடுக்கு நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்காக, தேசிய அளவிலிருந்து மாவட்ட நிலை வரை, பல்வேறு நிலைகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

i. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரின் தலைமையில், அமைச்சகங்களுக்கு இடையேயான குழு  அமைக்கப்பட்டுள்ளது.

ii. கூட்டுறவு அமைச்சகச் செயலாளரின் தலைமையில், தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு.

iii. அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளரின் தலைமையில், மாநில கூட்டுறவு மேம்பாட்டுக் குழு,

iv. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையில், மாவட்ட கூட்டுறவு மேம்பாட்டுக் குழு என நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, இதுவரை இரண்டு மாநில தலைமைச் செயலாளரின் தலைமையில், மாநில கூட்டுறவு மேம்பாட்டுக் குழு கூட்டங்களும்,  இரண்டு மாவட்ட ஆட்சியரின் தலைமையில், மாவட்ட கூட்டுறவு மேம்பாட்டுக் குழு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலப் பதிவாளர், சுதந்திரமான மதிப்பீடுகளை மேற்கொள்ளவும், மாநில, மாவட்ட, வட்டார நிலைகளில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவிடும் வகையில், கூட்டுறவு தரவரிசை கட்டமைப்பு ஒன்றை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தணிக்கை, நிதிச் செயல்பாடு, செயல்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட தரப்படுத்தப்பட்ட அளவுகோல்களை வழங்குகிறது.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297747&reg=3&lang=1

(Release ID: 2297747)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2297990) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी