மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

தமிழகத்தில் 1,631 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன: மத்திய அரசு தகவல்

प्रविष्टि तिथि: 11 AUG 2026 2:59PM by PIB Chennai

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திட்டம் மூலம் நாடு முழுவதும் ஜூன் 30, 2026 நிலவரப்படி மொத்தம் 20,149 மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகள் வழங்கும் வகையில் 1,631 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297561&reg=3&lang=1

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2297948) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Kannada