மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

அரசு மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை

प्रविष्टि तिथि: 11 AUG 2026 3:05PM by PIB Chennai

அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டைத் தவிர்த்து, அவற்றின் இருப்பை எப்போதும் உறுதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் 'இலவச மருந்துகள் சேவைத் திட்டம்' மூலம் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் துணை சுகாதார மையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 113 முதல் 381 அத்தியாவசிய மருந்துகள் வரை இலவசமாக வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் டிஜிட்டல் கண்காணிப்பு, தரக் கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

'பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திட்டம்' வாயிலாக இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வாரியம் மக்கள் மருந்தகங்களில் மருந்துகளின் இருப்பை நேரடியாகக் கண்காணித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2,110 மருந்துகள் மற்றும் 315 மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மக்கள் மருந்தகங்களில் தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய, அதிகம் விற்பனையாகும் 200 பொதுவான மருந்துகளை இருப்பு வைக்கும் மருந்தக உரிமையாளர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் 5 மத்திய சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 42 விநியோகஸ்தர்களைக் கொண்ட டிஜிட்டல் விநியோகச் சங்கிலி அமைப்பு மூலம் மருந்து தேவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகவலை மத்திய ரசாயனம், உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297567&reg=3&lang=1

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2297941) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati