ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மண்டலம் குறித்த தகவல்

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:28PM by PIB Chennai

ஜவுளித் துறையின் முழுமையான உற்பத்தித் திறனுடன், ஒருங்கிணைந்த, பெரிய அளவிலான, நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில், 2021-22 முதல் 2027-28 வரையிலான காலகட்டத்தில் ரூ 4,445 கோடி மதிப்பீட்டில் 7 பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம், ஆயத்த ஆடை உற்பத்திப்  பூங்காக்களை (பசுமை / பயன்பாடற்றத் தளங்களில்) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்காக தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுராகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ), மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு பூங்காவும் 3 லட்சம் வேலைவாய்ப்புகளை (1 லட்சம் நேரடி, 2 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள்) உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட / கிடைக்கக்கூடிய நிலம், பெறப்பட்ட முதலீட்டு முன்மொழிவுகள் குறித்த மாநில வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழகத்தில், 1,052 ஏக்கர் பரப்பளவில், ரூ 2,067.90 கோடி முதலீடு செய்வதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகளில் ஒரு பகுதியாக, 21 உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், 346 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கென, மாநில அரசு ரூ 34.80 கோடி செலவு செய்துள்ளது.

மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இன்று மக்களவையில், கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297501&reg=3&lang=1

(Release ID: 2297501)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2297921) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada