மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவச் சேவை: 245 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகளை இயக்கம்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 4:12PM by PIB Chennai
நாட்டின் கால்நடைத் துறையில் ஏற்பட்டுள்ள பெறும் முன்னேற்றங்கள் குறித்து மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அறிவித்துள்ளார். இவற்றில் கடன் வசதிகள் விரிவாக்கம், மின்னணு தொழில்நுட்பம் மூலம் சேவைகள், கால்நடை உற்பத்தி திறன் மேம்பாடு ஆகியவை அடங்கும்.
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கடன் வசதி அளிக்கப்படுகிறது. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ், பயன்பெறுவோரின் எண்ணிக்கை 2021-22-ல் 15.08 லட்சமாக இருந்த நிலையில் 2025-26-ல் 50.42 லட்சமாக அதிகரித்துள்ளது. 2024-25-ல் நாட்டின் ஆண்டு பால் உற்பத்தி 247.87 மில்லியன் டன்னாக அதிகரித்தது. 2025-26-ல் 407.18 மில்லியன் டாலர் அளவிற்கு பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் இருப்பிடத்திற்கே சென்று கால்நடை மருத்துவச் சேவை வழங்க 245 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகளை இயக்க பகிர்வு அடிப்படையில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297628®=3&lang=1
****
TV/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2297916)
आगंतुक पटल : 12