மருந்துகள் துறை
ஒடிசாவில் "மருந்து உற்பத்திக்கான மூலப்பொருள் பூங்கா" அமைக்கும் திட்டம் இல்லை: மத்திய இணையமைச்சர் தகவல்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 3:12PM by PIB Chennai
உலகத்தரம் வாய்ந்த பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மருந்து உற்பத்திக்கான மூலப்பொருள் (பல்க் ட்ரக்) தொடர்பான மூன்று பூங்காக்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை 20.03.2020-ல் ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்தின் கீழ், இத்துறைக்கு 13 மாநிலங்களிலிருந்து முன்மொழிவு பெறப்பட்டு, குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டன.
பல்க் டிரக் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டம் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் அல்லது மருந்துகள் துறையின் இதர மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஒடிசாவில் பல்க் டிரக் பூங்கா அமைப்பதற்கான எந்த முன்மொழிவும் பெறப்படவில்லை.
இத்தகவலை, மத்திய ரசாயனம், உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297574®=3&lang=1
****
TV/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2297906)
आगंतुक पटल : 9