ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டிற்கான சமர்த் திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 AUG 2026 1:25PM by PIB Chennai
ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் சமர்த் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் நிதி நேரடியாக அதனைச் செயல்படுத்தும் கூட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில், மாநிலம் அல்லது மாவட்டம் வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. 2017 முதல் மார்ச் 2026 வரையிலான காலத்தில், இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட, செலவிடப்பட்ட நிதி தொடர்பான விவரங்களை மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டிற்கான சமர்த் திட்டம், நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட ஜவுளி, அது சார்ந்த துறைகளில், நூற்பு, நெசவுப் பணிகளைத் தவிர்த்து, ஜவுளி உற்பத்தியின் முழு நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய, தேவை சார்ந்த, வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மார்ச் 2026 வரை, மொத்தம் 6.17 லட்சம் பயனாளிகள் பயிற்சி பெற்றுச் சான்றிதழ் பெற்றுள்ளனர். இவர்களில் 5.17 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமர்த் திட்டத்தின் கீழ், மார்ச் 2026 வரை, ராஜஸ்தான் மாநிலத்தில் (ஜுன்ஜுனு மக்களவைத் தொகுதி உட்பட) மொத்தம் 27,497 பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 23,102 பேர் பெண்கள், 10,727 பேர் பட்டியலினத்தவர், 4,753 பேர் ஷெட்யூல்டு பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297497®=3&lang=1
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297896)
வருகையாளர் எண்ணிக்கை : 42