ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கைவினைப் பொருட்கள் உட்பட ஜவுளி, ஆடைகள் ஏற்றுமதியில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:34PM by PIB Chennai

கைவினைப் பொருட்கள் உட்பட ஜவுளிஆயத்த ஆடைகள் துறையில்இந்தியாவின் ஏற்றுமதி, 2019-20 முதல் 2025-26 வரையிலான காலத்தில் 4.5% என்ற ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

இத்துறையின் போட்டித்தன்மையின் மீதான தாக்கத்தை மதிப்பிடுவதில்ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள்தொழில் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. சவால்கள் இருந்தபோதிலும்கைவினைப் பொருட்கள் உட்பட இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 2025–26-ல் ரூ.3,25,339 கோடியாக இருந்தது. இது 2024–25-ல் இருந்த ரூ.3,19,573.2 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீத வளர்ச்சியாகும்.

கைவினைப் பொருட்கள் உட்பட ஜவுளிஆடைகள் ஏற்றுமதியில்நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாகதமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியின் ஒட்டுமொத்த  மதிப்பு ரூ 4,20,539 கோடியாக உள்ளது.

மத்திய அரசின் ஜவுளி தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில்ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்திற்காகமத்திய அரசின் பங்களிப்பாக  தமிழ்நாட்டிற்கு ரூ 222.65 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ரூ 147.95 கோடி நிதி விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான விசைத்தறி தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காகதமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.40.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்துஅந்த நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்ரிட்டா இன்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297513&reg=3&lang=1

 

 

***

SS/SV/SH

 


(रिलीज़ आईडी: 2297888) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali