சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மீள்உருவாக்க மருந்துகளின் மேம்பாட்டிற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:33PM by PIB Chennai
சேதமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட செல்கள், திசுக்கள், உறுப்புகள் ஆகியவற்றை மீண்டும் வளர்ச்சியடையச் செய்வதற்கான அல்லது மாற்றுவதற்கான மீள்உருவாக்க மருந்துகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் பொதுத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆதாரம் அடிப்படையிலான வழிகாட்டுதலுக்கான மையம் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஸ்டெம் செல் சிகிச்சையின் செயல்திறன், பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 2025-26-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை https://www.dhr.gov.in/offerings/schemes-and-services/details/centre-for-evidence-based-guidelines-EzN1MTMtQWa என்ற இணையதளத்தில அறியலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், தொப்புள்கொடி ரத்த வங்கிச் சேகரிப்பு செயல்முறை, பரிசோதனை, சேமிப்பு, பராமரிப்பு, மருத்துவப் பயன்பாட்டிற்கான வெளியீடுக் குறித்த வழிகாட்டுதல் ஆவணத்தை 2023-ம் ஆண்டு வெளியிட்டதாக கூறியுள்ளது. இதை, https://www.icmr.gov.in/icmrobject/custom_data/pdf/resource-guidelines/GUCBB_F.pdf என்ற இணையதளம் மூலம் அணுக முடியும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் 2021-ம் ஆண்டு ஹீமோட்டோபயோடிக் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தை https://www.icmr.gov.in/icmrobject/custom_data/pdf/resource-guidelines/Nat_Guide_HCT.pdf என்ற இணையதளம் மூலம் அணுகலாம்.
இத்தகவலை, மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297509®=3&lang=1
***
SS/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2297881)
आगंतुक पटल : 9