கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நீர்வழிகள் மேம்பாட்டுத் திட்டம்

प्रविष्टि तिथि: 11 AUG 2026 3:49PM by PIB Chennai

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், தேசிய நீர்வழி-4-ல் (கிருஷ்ணா நதி) வாகனங்களை ஏற்றிச் செல்லும் 'ரோ-ரோ' (Ro-Ro - Roll on-Roll off) படகுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆந்திரப் பிரதேசத்தின் முக்தியாலா பகுதியில் ரோ-ரோ படகு முனையத்தை அமைத்துள்ளது.

சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நான்கு மிதக்கும் படகுத்துறைகள் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் 2024-ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், ஹரிசந்திராபுரத்தில் ரோ-ரோ படகு முனையம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தேசிய நீர்வழி-4-ன் மேம்பாட்டிற்காக 2023-24-ல் ரூ.0.67 கோடியும், 2024-25-ல் ரூ.1.22 கோடியும், 2025-26-ல் ரூ.18.28 கோடியும் ஒதுக்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டில் இந்நீர்வழிப் பாதையில் 5.71 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்தும், 2.34 மில்லியன் பயணிகள் போக்குவரத்தும் நடைபெற்றுள்ளன.

இப்பாதையில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய ஆந்திராவின் இப்ராஹிம்பட்டினத்தில் நிலம் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், புலிச்சிந்தலா அணையின் நீர்த் திறப்பு, தரைப்பாலங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்ற சவால்களையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார் .

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297608&reg=3&lang=1

****

TV/SE/SH


(रिलीज़ आईडी: 2297842) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese