கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
நாட்டில் புதிய உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
प्रविष्टि तिथि:
11 AUG 2026 3:50PM by PIB Chennai
நாட்டில் உள்நாட்டு நீர் வழிப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், தேசிய நீர்வழிகள் சட்டம் 2016-ன் கீழ் மொத்தம் 111 உள்நாட்டு நீர்வழிகள் தேசிய நீர்வழிகளாக (NWs) அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை 32 தேசிய நீர்வழிகள் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்காகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
2026-27 பட்ஜெட் அறிவிப்பு மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சொகுசுக் கப்பல் சுற்றுலா மற்றும் பயணிகள் படகுப் போக்குவரத்துக்காக கூடுதலாக 19 புதிய தேசிய நீர்வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டின் பவானி ஆற்றுப் பகுதி (NW-20) 2029-30 நிதியாண்டில் மேம்படுத்தப்பட உள்ளது.
புதிய தேசிய நீர்வழிகளை அறிவிப்பதற்கு முன்பாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுச் சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ள நீர்வழிகளை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297610®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2297835)
आगंतुक पटल : 12