விவசாயத்துறை அமைச்சகம்
தேசிய வேளாண் எந்திரமயமாக்கல் கொள்கை
प्रविष्टि तिथि:
11 AUG 2026 4:33PM by PIB Chennai
தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வேளாண் நடைமுறைகளை இயந்திரமயமாக்கும் துணைத் திட்டம் என்ற மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டம், விவசாயம், விவசாயிகள் நலத்துறையால் மாநில அரசுகள் வாயிலாக, தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம், சிறு, குறு விவசாயிகள், விவசாயத்திற்கான இயந்திர ஆற்றல் குறைவாக உள்ள பகுதிகளுக்கு இயந்திரமயமாக்கல் வசதிகளைக் கொண்டு சேர்ப்பது, சிறிய நில உடைமை, தனிப்பட்ட முறையில் வேளாண் இயந்திரங்களை வாங்குவதில் ஏற்படும் அதிக செலவு ஆகிய பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க ஏதுவாக வாடகை இயந்திர சேவை மையங்களை ஊக்குவிப்பதையும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
வேளாண் இயந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்கு, அவற்றின் விலையில் 40 முதல் 50 சதவீதம் வரை, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு இத்திட்டம் வகை செய்கிறது. மேலும், ரூ. 250 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீடு கொண்ட வாடகை இயந்திர சேவை மையங்களை அமைப்பதற்கும், திட்டச் செலவில் 40 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
ரூ. 30 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீடு கொண்ட வேளாண் இயந்திர வங்கிகளை அமைப்பதற்கு, திட்டச் செலவில் 80 சதவீதம் வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய இயந்திர வங்கிகளை அமைப்பதற்குத் திட்டச் செலவில் 95 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. துல்லியமான வேளாண் கருவிகள், ட்ரோன்கள், பிற மேம்பட்ட எந்திரத் தொழில்நுட்பங்கள், பெண்களுக்கு ஏற்ற வேளாண் கருவிகள் உள்ளிட்ட நவீன விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்துவது இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்படுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் இயந்திரங்களுக்கான சோதனை, சான்றளிப்பு, திறன் மேம்பாடு, செயல்விளக்கங்கள், பயிற்சிகளுக்கும் இத்திட்டம் ஆதரவளிக்கிறது.
மத்திய வேளாண்துறை இணையமைச்சர் திரு. ராம்நாத் தாக்கூர் இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297647®=3&lang=1
(Release ID: 2297647)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2297829)
आगंतुक पटल : 16